'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 27, 2019 07:21 PM
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி அப்பகுதியையே பதைபதைக்க வைத்துள்ளது.

இலங்கையை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் யோகேஸ்வரி தம்பதியரின் 4 வயது மகள் புனிதவள்ளி. புனிதவள்ளிக்கு உடல் நலக்குறைவால், அவரை இந்தத் தம்பதியரின் பெற்றோர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்த சூழலில், அந்த மருத்துவமனை பகுதியில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த தெருநாய்கள், மருத்துவமனைக்குள் கேட்பாரன்றி நுழைந்து குழந்தையைக் கடித்துக் குதறியுள்ளன. அங்கிருந்த பலரையும் அச்சப்படுத்திய இந்த சம்பவத்தின்போது, உடனே அருகில் இருந்த சிலர் நாய்களை விரட்டி குழந்தையை மீட்டனர்.
உடனே பதறி அடித்துக்கொண்டு, புனிதவள்ளியின் பெற்றோர்கள் மருத்துவ ஊழியர்களிடம் கூறியும் சிகிச்சைக்கு 2 மணி நேரம் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கு விரைந்த மருத்துவ அலுவலர், சாந்தி, நாய்கள் உள்ளே நுழையும் வரை, மருத்துவ ஊழியர்கள் அஜாக்கிரதையாக இருந்ததையும், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாததையும் கண்டித்துள்ளார். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
