‘எங்க பொண்ணையா காதலிக்கிற??’... 'நம்பி சென்ற கர்ப்பிணி மனைவி'... 'இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 10, 2019 05:08 PM

சாதி மாறி திருமணம் செய்ததால், மனைவியின் தந்தை உள்பட எட்டு பேர் சேர்ந்து, பெண் காவலர் முன்னிலையில் இளைஞரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dalit Man Killed Allegedly By Wife\'s Upper Caste Family

குஜராத் மாநிலம் காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி. 25 வயதான இவர், அகமதாபாத்தைச் சேர்ந்த ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சோலங்கி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இருவரின் காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே பெண்ணின் பெற்றோர்களை மீறி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு, சோலங்கியின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் வீட்டார் ஊர்மிளாவை சந்தித்து, தங்கள் வீட்டில் வந்து சில நாள்கள் தங்குவதற்கு அழைப்பு விடுத்ததுடன்,  மீண்டும் கணவரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பி அவரின் தாய் வீட்டுக்கு, 2 மாத கர்ப்பிணியான ஊர்மிளாவை சோலங்கி அனுப்பினார். தாய்வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததுடன், அவரோடு பேச முடியாததால், குஜராத் பெண்கள் பாதுகாப்பு 181 உதவியை சோலங்கி நாடியுள்ளார். அதன்பின்னர் 181 வாகனத்தில், ஒரு பெண் காவலர் உள்பட சிலருடன் சோலங்கி, கடந்த திங்கள்கிழமை மாலை ஊர்மிளா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு வந்த  சோலங்கியை, கூர்மையான பொருள்களால் கடுமையாக  பெண் வீட்டார் தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற பெண் காவலர் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் சோலங்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அங்கு ஊர்மிளா இல்லை எனக் காவலர் தெரிவித்துள்ளார். சோலங்கி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : #MURDER #MARRIAGE