'வந்ததும் தெரியல.. போனதும் தெரியல'.. ‘ஒரு நொடியில்’ பெண்மணியை பதற வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 08, 2019 03:30 PM

சமீப காலமாகவே கூட்டுத் திருட்டு என்பது பொது வெளியில் பகிரங்கமாகவே நிகழ்கிறது.

2 men snatched delhi womans handbag bizarre incident

சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உணர்ந்தே, ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,  இரண்டிரண்டு பேராக சேர்ந்துகொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு ரோந்து செல்கின்றனர். ஒருவர் திட்டமிட்டு, திடீரென வெகுஜன மக்களின் உடமைகளைப் பிடிங்கிக் கொண்டு ஓடிவந்தால், இன்னொருவர் பறப்பதற்குத் தயாராக பைக்கில் காத்திருக்கும் பழைய ஃபார்முலாதான்.

அப்படித்தான் டெல்லியில், லக்‌ஷ்மி நகர் வீதியில், காய்கறி மற்ற்ம் உணவுப் பொருட்கள் சிலவற்றை ஷாப்பிங் செய்தபடி, ஒரு பெண்மணி  உள்ள தனது வீட்டுக்கு செல்கிறார். வீட்டு வாசலின் முன் நின்றுகொண்டிருக்கும் அந்த பெண்மணிக்கு பின்னால் அந்தத் தெருவில் வந்து நிற்கும் இரண்டு நபர்களில் ஒருவர் மட்டும் இறங்கிச் சென்று, அந்த பெண்மணியின் உடமைகளைப் பறித்துக்கொண்டு ஓடுகிறார், அதற்குள் பைக்கில் இருப்பவர் பைக்கை தயார் நிலையில் வைத்திருந்ததால் இருவரும் எஸ்கேப் ஆகின்றனர்.

உணர்ச்சிவசப்பட்டு அவர்களைப் பிடிக்க ஓடிய பெண்மணி சாலையில் விழுகிறார். சிசிடிவி காட்சிகளில் பதிவான இந்த வீடியோ பதறவைத்ததை அடுத்து, போலீஸாரில் புகார் அளிக்கச் சென்ற இந்த பெண்மணி தன்னிடம் போலீஸார் தவறான வழிகாட்டுதல் முறையைப் பின்பற்றியதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்ய பார்த்ததாகவும் போலீஸார் மீதும் புகார் அளித்துள்ளார்.

Tags : #DELHI #ROBBERY #CCTVFOOTAGE #BIZARRE