'தியானம் இன்னும் முடியலே.. சூரியனை 40 மினிட்ஸ் லேட்டா உதிக்கச் சொல்லி ஆர்டர் போட்டேன்'.. 'வேற லெவல்'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jul 06, 2019 12:17 AM

நித்தியானந்தா தியான பீடத்தின் நிறுவனரான நித்தியானந்தாவிற்கும் சர்ச்சைகளுக்கும் வெகுதூரம் இல்லை என்பது உலகம் அறிந்ததே.

i ordered sun to rise 40 min late,says nithayanada video

முன்னதாக ஐன்ஸ்டீனின் E=MC^2 என்கிற இயக்க ஆற்றலுக்கான சமன்பாட்டுக்கு நித்தியானந்தா கூறிய விளக்கம் உலகையே அதிர வைத்தது.  பின்னர் தன் உருவத்தை சிலையாக வடிவமைத்து பக்தர்களை வணங்கச் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார். தமிழகத்திலும் கர்நாடகாவிலும் அவ்வப்போது தன்னுடைய சீடர்களுடன் நித்யானந்தா உரையாடும் பலவிதமான வீடியோக்கள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி பரபரப்பை கிளப்புவது உண்டு. 

இந்த நிலையில் மிகசமீபத்தில் அவர், சூரிய உதயத்தை தனது தியானத்திற்காக தள்ளிப்போட்டு கட்டளையிட்டதாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றி தன்னுடைய சீடர்களுடன் உரையாற்றிய நித்யானந்தா, ‘நம்முடைய ஒவ்வொரு பொழுதும் சூரிய உதயத்துடன்தான் தொடங்குகிறது. ஆனால் இன்று மட்டும் சூரியன் மிக தாமதமாகவே உதித்ததை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள்?’ என்று கேட்கிறார். பக்தர்கள் வாயடைத்துப் போய் யோசிக்கின்றனர்.

ஆனால், ரகசியத்தை தானே கட்டவிழ்க்கும் விதமாக மீண்டும் பேசத்தொடங்கிய நித்யானந்தா, ‘நன்றாக கூகுளில் சென்று தேடிப் பார்த்தீர்களேயானால், இன்று மட்டும் சூரியன் வழக்கமாக உதிக்கும் நேரத்தை விட 40 நிமிடம் காலதாமதமாக உதித்திருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா? நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்க கூடாது என்று கட்டளை இட்டதுதான்’ என்று கூறியவுடன் பக்தர்கள் புல்லரித்துப்போய் கைத்தட்டுகின்றனர். முன்னாள் பிபிசி செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த பிறகு இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது.

Tags : #NITHYANANDA #VIDEOVIRAL #SUNRISE