'இப்டியா பண்ணுவீங்க'.. பெண் வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 30, 2019 05:26 PM

குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏவின் சகோதரர் ஒருவர், ஊர் மக்களுடன் சேர்ந்து வனத்துறை பெண் அதிகாரியை கட்டையால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

woman forest guards brutaly attacked in telangana videoviral

தெலங்கானா மாநிலத்தி உள்ளது சிர்பூர் மண்டலப் பகுதி. இப்பகுதிக்கு உட்பட்ட சரசலா கிராமத்துக்குச் சென்றுள்ளார் வனத்துறை சிறப்புப் பெண் அதிகாரி அனிதா. அக்கிராமத்தில் உள்ள அரசு நிலங்களை தேர்வு செய்த அனிதா, மாநிலத்தின் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரம் நட முற்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அவற்றுள் சில நிலங்கள் தமக்கு சொந்தமான நிலங்கள் என்று, அவற்றில் மரம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவ்வூர் மக்கள், அப்பகுதி எம்.எல்.ஏ கொனரு கோணப்பா ராவின் சகோதரரான கொனரு கிருஷ்ணராவிடம் முறையிட்டுள்ளனர். அப்போது தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார் கொனரு கிருஷ்ணராவ்.

பிறகு அனிதாவிடம் வாக்குவாதம் செய்த கிருஷ்ண ராவ், பேசி பயனில்லை என்றறிந்ததும் கையில் கிடைத்த மரக்கட்டையை எடுத்து பெண் வனத்துறை அதிகாரி என்றும் பாராமல் சரமாரியாக , தன் ஆதரவாளர்களுடன் இணைந்து ஊர் மக்களின் சப்போர்ட்டுடன் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ பரவி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags : #VIDEOVIRAL #TELANGANA