'7 வயது சிறுவனுக்கு'... நேர்ந்த கதி.. குடும்பமே சேர்ந்து செய்த பதறவைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 08, 2019 10:25 AM

அஸாமின் உதல்குரி மாவட்டத்திற்குட்பட்ட கலேய்கோன் எனும் ஊரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது குடும்பத்தினரின் உதவியுடன், 7 வயது சிறுவனை பலிகொடுக்க துணிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

science teacher attempts to sacrifice 7 yr old minor boy

கலேய்கோனில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியரான ஜாதவ் சஹாரியா என்பவரது தலைமையின் கீழ் செயல்படும் குடும்பம்தான் இத்தகைய மூடநம்பிக்கையான காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த குடும்பமும், முதலில் சிறிய பூஜை ஒன்றை நடத்திய பிறகே தங்கள் உடமைகளை, வீட்டோடு வைத்து கொளுத்துவதற்கு திட்டமிட்டதாய் கூறப்படுகிறது.

இதனை அக்கம் பக்கத்தினர் சிலர் முன்னதாகவே கவனித்தபோது, விசாரித்துள்ளனர். அப்போதுதான் சஹாரியா தன் மனைவி, தன் மகன் உள்ளிட்டோரின் உதவியோடு, தங்களது பைக், கார் உள்ளிட்டவற்றோடு சேர்த்து, தங்களது உறவினரின் 7 வயது மகனையும் வீட்டுக்குள் வைத்து, தீயிட்டுக் கொளுத்துவதற்கு தயாராய் இருந்ததும், அனைவரும் நிர்வாண கோலத்தில் இருந்ததும் தெரிய வந்தது.

மட்டுமல்லாமல், சஹாரியாவின் வீட்டுக்குள்ளேயே கட்டப்பட்டுள்ள சிறிய கோவில் ஒன்றில், சஹாரியாவின் உறவினர்கள் சிலர், தங்களது 7 வயது மகனை அமரவைத்து பூஜைகள் செய்துகொண்டிருந்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சிறுவன் மீட்கப்பட்டதோடு, சஹாரியா, சஹாரியாவின் குடும்பம் மற்றும் அவரது உறவினரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags : #ASSAM #BIZARRE #SUPERSTITIOUSBELIEF