'அச்சோ.. இப்ப என்ன பண்றது'.. சமயோஜிதமாக செயல்பட்ட இளைஞர்.. மனம் நெகிழந்த பெற்றோர்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Jun 27, 2019 06:25 PM
2-வது மாடியில் இருந்து கீழே விழப்போன குழந்தையை, இளைஞர் ஒருவர் சமயோஜிதமாகக் கையில் பிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் பிரபலமாகியுள்ளது.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் மாகாணத்திற்குட்பட்ட ஃபெயித் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள வீடு ஒன்றின் 2வது மாடியில் இருந்து தோஹா முகமது என்கிற 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்தது.
ஆனால் அதே பகுதியில் உள்ள வொர்க்ஷாப் ஒன்றில் பணிபுரியும் ஃபெயூஸி ஸபாத் என்கிற இளைஞர், குழந்தையின் வீட்டிற்குக் கீழே வந்துகொண்டிருந்தபோது, அந்த குழந்தை நழுவி விழுவதை, முன்னமே பார்த்துவிட்டார். ஆகையால் குழந்தை விழும்போது திரைப்படங்களில் வருவது போல், அந்த குழந்தையை அழகாக கேட்ச் செய்தார்.
குழந்தை விழுவதைப் பார்த்ததும், என்ன செய்வதென முதலில் திகைத்த ஸபாத், பின்னர் குழந்தையை, சரியான கணத்தில் தன் கைகளில் ஏந்தி காப்பாற்றிய சம்பவத்தால் அவர் அப்பகுதியின் சூப்பர் ஹீரோவானதோடு, அனைவராலும் பாராட்டுப் பெற்றார். அதுமட்டுமல்லாமல், தங்களின் குழந்தையைக் காப்பாற்றியதாலும், விலைமதிக்கமுடியாத தங்கள் குழந்தையைக் காப்பாற்றியதாலும் ஸபாத்துக்கு பரிசு தந்திருக்கின்றனர் அந்த குழந்தையின் பெற்றோர்கள்.
துருக்கியில் குடியேறி வாழ்ந்து வரும் ஸபாத், அடிப்படையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். இவர் குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வீடியோவாக வலம் வருகிறது. #சபாஷ் ஸபாத்!