'வினையான விளையாட்டு'.. 'ஓடாத.. சுட்டுடுவேன்'.. 3 வயது மகனுக்கும் அம்மாவுக்கும் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 08, 2019 11:17 AM

இலுப்பூர் மேலப்பட்டியில் தனது குடும்பத்துடன் வசித்துவரும் 49 வயதான செல்லக்கண்ணு என்பவரது வீட்டுக்கு, அவரது எதிர்வீட்டில் வசிக்கும் விஜயக்குமாரின் 26 வயதான மனைவி நீலாவும், நீலாவின் 3 வயது மகன் அஜித்தும் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

3 yr old boy and a mother shot by another boy with a gun

இடையில் அந்த வீட்டுக்குள் இருந்த விளையாட்டுப் பொருட்களை, அஜித் கலைத்துப் போட்டுவிட்டு, ஓடி விளையாண்டுக் கொண்டிருந்துள்ளான். அப்போது செல்லக்கண்ணுவின் 15 வயது மகன் தேவசேனாதிபதி ஒரு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அஜித்திடம், ஓடி விளையாண்டால் தன் துப்பாக்கி கொண்டு சுட்டுவிடுவதாகச் சொல்லி விளையாட்டாக மிரட்டியுள்ளான்.

ஆனால் தேவசேனாதிபதி மட்டும்தான் விளையாட்டுத் தனமாக மிரட்டியுள்ளானே தவிர, அந்தத் துப்பாக்கி விளையாட்டுத் துப்பாக்கி அல்ல. அது செல்லக்கண்ணு அரசுரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த துப்பாக்கி.  அது மட்டுமல்லாமல், அந்தத் துப்பாக்கியில் குண்டுகளை லோட் செய்தும் வைத்திருந்திருக்கிறார்.

செல்லக்கண்ணு இந்த விஷயத்தை மறந்துவிட்டு அநாயசமாக அமர்ந்திருக்க, மகன் தேவசேனாதிபதி அஜித்தை விளையாட்டாகச் சுடப்போவதாகச் சொல்லி விளையாட, எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கைபட்டு அடுத்தடுத்து 2 குண்டுகள் நீலா உடலிலும், அஜித்தின் உடலிலும் பாய்ந்து சோகத்தை ஏற்படுத்தியது.  காயமடைந்த நீலாவும் அஜித்தும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் செல்லக்கண்ணு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Tags : #PUDUKOTTAI #BIZARRE #GUN