'நீ யார்யா.. நடுவுல'... 'முடியாது.. எவன் வேணாலும் வரட்டும்'.. 'அடிப்பீங்களா?'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 03, 2019 09:05 PM

டிராஃபிக் போலீஸாருக்கு இது சோதனைக் காலக்கட்டமா தெரியவில்லை. தினம் ஒரு ஆசாமி வந்து போலீஸாரிடம் வம்பிழுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

Man rides without helmet & argues with traffic police

சென்னை அமைந்தகரையில், ஹெல்மெட் அணியாமல் ஒரு பெண்மணியுடன் வந்த ஆசாமி ஒருவரின் வண்டியை நிறுத்தி டிராஃபிக் போலீஸ் ஒருவர் ஓரமாக வரச் சொல்லி கேட்கிறார். ஆனால் அந்த ஆசாமியோ, பொசுக்கென கோவப்பட்டு, ‘நீ யார்யா நடுவுல வந்து நிக்குற.. நான் ஓரமாலாம் வரமுடியாது. மொதல்ல சிக்னல் போடுங்க’ என்று சவுண்டு விடுகிறார்.

இவற்றை டிராஃபிக் போலீஸாரின் தரப்பு வீடியோ எடுக்கிறது. ஆனாலும் அந்த ஆசாமி, ‘நான் நகர மாட்டேன். இரவு 10 மணி ஆனாலும் இங்கதான் நிப்பேன். யார் வேணாலும் வரட்டும். என்ன பண்ண முடியுமோ.. பண்ணுங்க.. பாத்துக்கிறேன்.. அடிக்குறதுன்னா அடிங்க’ என்கிறார்.

ஆனால் டிராஃபிக் போலீஸோ,  ‘நான் ஏன் அடிக்கப் போறேன்.. ஏன் வாயா போயான்னு மரியாதை இல்லாம பேசுறீங்க.. நான் உங்க கிட்ட அப்படி பேசுனனா?’ என்று கேட்கிறார். இன்னொருவரோ, ‘சார் மொதல்ல ஓரமா வாங்க.. அப்புறம் பேசிக்கலாம்’ என்கிறார். ஆனாலும் அந்த ஆசாமி, ‘50, 100 என்ன 1000 ரூபாய் வேணாலும் தரேன்.. ஆனா ஓரமா வர முடியாது’ என்கிறார்.

அதன் பின்னர் அவரது பின்னால் அமர்ந்திருந்த பெண்மணி இறங்கி நகர்ந்து நிற்கிறார். இந்த வீடியோ இணையத்தையே புரட்டிப் போட்டபடி வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அந்த ஆசாமியின் வண்டியை பறிமுதல் செய்துகொண்டு, போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு வரசொல்லியிருக்கின்றனர். அதன் பின்னரே அவரை முழுவிவரம் தெரியும் என்று தெரிகிறது.

Tags : #CHENNAI #VIDEOVIRAL