'ஆஹா.. இனி இதுகிட்ட வேற போராடணுமா’.. இளைஞர்களுக்கு வந்த சோதனை.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Jul 02, 2019 12:48 PM
விடுமுறைக் காலத்தில் இளைஞர்கள் எல்லாம் அவிழ்த்துவிட்ட மாடு போல் விளையாடுவதுண்டு. ஆனால், மாடு ஒன்று தன் கட்டினை அவிழ்த்துக்கொண்டு கிரவுண்டுக்குள் வந்து ஃபுட்பால் விளையாடத் தொடங்கிவிட்ட காட்சி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆம், மாடு ஒன்றுக்கு இளைஞர்கள் விளையாடும் ஃபுட்பால் மீது ஆசை வந்துவிட்டதால், கிரவுண்டுக்குள் புகுந்து ஃபுட்பாலை லாக் செய்துவைத்துக் கொண்டதால், ‘இது என்னடா புதுசா இருக்கு’ என்பது போல், இளைஞர்கள், ‘இனி இதுகிட்ட இருந்து பந்து கெடைக்குறதுக்கு வேற போராடணுமா’ என்று, பந்தைத் திரும்பப் பெற முயற்சிக்கின்றனர்.
ஆனால் அந்த மாடோ, ‘பந்தைத் தருவேனா?’ என்கிறது. மாட்டின் இந்த அலப்பறைதான் தற்போது வீடியோவாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ளதுபடி, கேரளாவில் மைதானத்துக்குள் இளைஞர்கள் நான்கைந்து பேர் ஃபுட் பால் விளையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடீரென புகுந்த மாடு ஒன்று அந்த இளைஞர்களிடம் இருந்து ஃபுட்பாலை லாவகமாகக் கைப்பற்றியதோடு, ‘நான் கொஞ்சம் நேரம் விளையாடிட்டுதான் போவேன்’ என்பது போல் ஃபுட்பாலை முன்னங்கால்களால் உருட்டுகிறது.
அதன் பின்னர் மாடு ஃபுட்பாலை ஒரு கிக் அடித்ததும், இளைஞர்கள் எல்லாம் அந்த ஃபுட்பாலை நோக்கி, ஓட, மாட்டுக்கும் விளையாட வேண்டும் என்று ஆசை வந்ததுபோல், அதுவும் பந்து பின்னால் இளைஞர்களோடு ஓடுகிறது. இதனை இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
