'இதெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாங்க பங்கு'.. 'ஆமா பங்கு'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jul 09, 2019 02:04 PM

போலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் திருடர்கள் பலரையும் விரட்டிப் பித்துள்ள பலே போலீஸார் இருவருக்கு அசைன் செய்யப்பட்ட புதிய டாஸ்க் கலகலப்பூட்டியுள்ளது.

Two Cops assigned to Chase Squirrel in Police Station

அமெரிக்காவின் நியூ ஹாம்ஸைர் நகரில் உள்ள காவல் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அணில் ஒன்று புகுந்ததாகவும் வெகு நாட்களாக அந்த அணில் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அந்த அணிலை ஒன்றும் செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டனர்.

ஆனால் தொல்லை கொடுக்கத் தொடங்கியதால், இந்த அணிலைத் துரத்தும் சிறப்பு ஆபரேஷனுக்கு அந்த காவல் நிலைய அதிகாரிகள் இரண்டு போலீஸாரை,  அசைன் செய்தனர். ‘பெரிய பெரிய திருடர்களைப் பிடித்த நமக்கு இப்படி ஒரு ஆபரேஷனா?’ என்று நொந்துகொண்ட இரண்டு போலீஸாரும், வெற்றிகரமாக அணிலை வெளியேற்றினர்.

அணில் வெளியே செல்வதற்கு ஏதுவாக, கதவைத் திறந்துவைத்துவிட்டு, 2 போலீஸாரும் அணிலை வெளியேற்றும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகின்றன. இந்த ரிஸ்க்கான ஆபரேஷனில் அணிலுக்கோ, போலீஸாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என போலீஸார் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.

Tags : #VIDEOVIRAL #POLICE #SQUIRREL