'வீட்டு கார் பார்க்கிங்கில் நுழைந்ததும்'..'துப்பாக்கி முனையில்' .. மிரளவைக்கும் சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 01, 2019 09:11 PM

டெல்லியில் நள்ளிரவு நேரம் முகமூடிக் கொள்ளையர்கள் ஒரு வீட்டின் கார் பார்க்கிங்கிற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ள சம்பவம் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Family of Delhi robbed at gunpoint by 3 masked miscreants

நள்ளிரவு 3 மணி அளவில், டெல்லி மாடல் டவுனில் இருக்கும் வீட்டு பார்க்கிங் ஏரியாவுக்குள், ஒரு குடும்பம் காரில் வந்து நிற்கிறது. காரை இயக்கி வந்த நபரின் அருகில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி அமர்ந்திருக்கிறார். அந்த காரை கேட்டை திறந்து உள்ளே வந்து காருக்குச் சொந்தக் காரர் நிறுத்த்தியவுடன் பின்னால் இருள் சூழ்ந்த இடத்தில் யாரோ ஒருவர் வந்துநிற்கிறார்.

காரை இயக்கி வந்தவர் இறங்கியவுடன், அவரை மடக்கிப் பிடித்து, துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார் ஒரு முகமூடிக் கொள்ளையர். உடனே இன்னொருவர் காரில் அமர்ந்திருக்கும் பெண்மணியிடம் போய் மிரட்டுகிறார். மொத்த குடும்பத்தையும் மிரட்டிய 3 பேர் கொண்ட இந்த முகமூடிக் கொள்ளை கும்பல் செய்த காரியம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதோடு, காண்போரை மிரட்டும் வகையில் உள்ளது.

திரைப்பட பாணியில் நள்ளிரவில் வீடுபுகுந்து வீட்டின் முன்புறமாக, சாலையை ஒட்டியிருக்கும் கார் பார்க்கிங்கிலேயே முகமூடி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் பலரையும் பதறவைத்துள்ளது. இத்தனை பாதுகாப்பில்லாத் தன்மை இருப்பதாக அச்சப்படவும் செய்துள்ளது.

Tags : #DELHI #VIDEOVIRAL #BIZARRE