‘ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் எம்.எல்.ஏ செய்த அதிர்ச்சிக் காரியம்..’ வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 04, 2019 06:44 PM

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் பிரகாஷ் சேதேகர் சென்றுள்ளார்.

Congress MLA throws mud on engineer near Mumbai Video goes Viral

கங்காவேலி பாலம் அருகே ஆய்வு செய்ய வந்த பிரகாஷ் சேதேகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் ரானேவும் அவருடைய ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கு ஏற்கெனவே பக்கெட்டுகளில் தயாராக வைத்திருந்த சேற்றை எடுத்து வந்து அவர் மீது ஊற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரைப் பாலத்தில் கட்டி வைக்கவும் அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. சமீபத்தில் இதேபோல மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ விஜய் வர்க்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதே போல மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

 

Tags : #MLA #ENGINEER