'போலீஸ் யுனிஃபார்மில்'..'போலீஸ் வாகனம் முன்பு'.. நடந்த 'டிக்டாக்கில் டான்ஸ்?'.. 'சர்ச்சைக்குள்ளான வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 02, 2019 07:54 PM

பட்டிதொட்டியெல்லாம் பரவிய டிக்டாக், இறுதியில் வீட்டுப் பெண்களை வீட்டிலும், கல்யாண மணமக்களை மேடையிலும் ஆடவைத்து அழகு பார்த்தது.

men dancing for tiktok video in police dress viral

குட்டிச்சுவருக்குள் பாடி, ஆடிக்கொண்டிருந்த பல திறமையாளர்களை வெளியில் கொண்டுவந்த டிக்டாக், அதே சமயம், பலரின் நேரத்தையும் சிந்தனையையும் வீணடிப்பதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  ஒரு கட்டத்தில் டிக்டாக் செயலிக்கு எதிரான வழக்குகளும் தொடரப்பட்டன.

அதன் பின், டிக்டாக் முழுமையாக தடை செய்யப்படும் நிலைக்குச் சென்று, மீண்டு வந்தது. இதற்கென உடனடியாக தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகள் செய்யப்பட்டதை அடுத்து, டிக்டாக் செயலிக்கான சில வரையறைகளும் கொண்டுவரப்பட்டன. அதன்படி, தற்போது டிக்டாக் பலரின் மொபைலிலும் ஒளிர்கிறது.

அதோடு, தற்போது டிக்டாக் வீடியோக்கள் பொதுவெளிகளிலும் எடுக்கப்படுகின்றன. அப்படித்தான் கேரள போலீஸார் சிலர், தங்களிடம் அகப்பட்டுக்கொண்ட குற்றவாளி ஒருவரிடம் இணைந்து, கேரள போலீஸ் வாகனம் முன்பு டிக்டாக்கிற்கு டான்ஸ் ஆடுவது போன்றதொரு வீடியோ வலம் வருகிறது.

ஆனால், இதில் உள்ள போலீஸார் உண்மையானவர்கள் அல்ல, சினிமா ஷூட்டிங்கிற்கு பிறகு இவ்வாறு ஆடியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வீடியோ வைரலாக உள்ளது.

Tags : #KERALA #TIKTOK #VIDEOVIRAL