"எனக்கு நடு 'ரோட்டுல படுத்தா தான் தூக்கம் வரும்..." 'லீ மெரிடியன் ஹோட்டலில் 'சூட் ரூம்' போட்ட மாதிரி... உரிமையுடன் படுத்து தூங்கிய 'குடிமகன்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் குடித்துவிட்டு கலாட்டா செய்த நபர் ஒருவர் நடு சாலையில் கைலியை விரித்து போட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வள்ளுவர் சிலைக்கு பின்புறம் இரண்டு அரசு மதுபானக்கடைகள் அருகருகே அமைந்துள்ளன. இங்கு மது அருந்துபவர்களால் அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அங்கு மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வந்த நபர் ஒருவர் திடீரென தான் அணிந்திருந்த கைலியை அவிழ்த்து சாலையில் நடுவே விரித்து ஒய்யாரமாக படுத்துத் தூங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மது போதையில் படுத்து இருக்கும் அந்த குடிமகனை சாலையில் செல்பவர்கள், தூக்கி சென்று சாலை ஓரம் படுக்க வைத்தாலும், மீண்டும் அவர், சாலையின் நடுவில் சென்று படுத்துக் கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தனது முடிவிலிருந்து அணுவளவும் அசைந்து கொடுக்கவில்லை அந்த குடிமகன். மது போதையில் இவர் செய்த கலாட்டா, பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது.