பிரதமர் மோடி 'தடுக்கி விழுந்த, அந்த ஒரு படிக்கட்டை மட்டும் இடிச்சு!'.. .. உ.பி.அரசின் 'அதிரடி' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 18, 2019 06:21 PM
பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து மீண்டும் மறு சீரமைத்து கட்டவுள்ளதாக உ.பி.அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டத்துக்கு சென்ற போது இந்தியப் பிரதமர் மோடி தனது பாதுகாவலர்களுடன் படிக்கட்டில் ஏறிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த கட்டிடத்தின் வளாகத்தின் படிக்கட்டுகளில் தடுக்கி விழ நேரிட்டது. இந்த துரதிர்ஷ்டமான இடர்பாட்டினை பிரதமர் மோடி சந்திக்க நேர்ந்த அந்த படிக்கட்டுகளின் இடையில் இருக்கும் ஒரே ஒரு படி மட்டும் மிகவும் குறுகலானதாகவும், உயரம் குறைந்தததாகவும் இருக்கிறது என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த ஒரு படிக்கட்டு மட்டும் விரைவில் இடிக்கப்பட்டு மீண்டும் மற்ற படிக்கட்டுகளுக்கு இணையான உயரத்தில் முறையாகக் கட்டப்படும் என்று தெரிவித்துள்ள கோட்ட ஆணையர் எம்.போஃப்ட், அந்த படிக்கட்டில் பலரும் தடுக்கி விழ நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
