கங்கை ஆணைய கூட்டத்திற்கு சென்றபோது... ‘திடீரென’ படிக்கட்டில் ‘தடுக்கி’ விழுந்த ‘பிரதமர் மோடி’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 14, 2019 07:44 PM

பிரதமர் மோடி படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி விழுந்ததில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video PM Modi Stumbles On The Steps Of Ganga Ghat In Kanpur

கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் இன்று உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர், உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் பீகாரின் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி கட்டட வளாகத்தின் படிக்கட்டில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏறிச்சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த படிகளில் ஒன்று மட்டும் சற்று உயரமாக இருந்ததால் அதில் ஒரு பாதுகாப்பு வீரர் லேசாக தடுக்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவருக்கு பின்னால் வந்த பிரதமர் மோடி அந்த படிக்கட்டைத் தாண்டும்போது தடுக்கி கீழே விழுந்துள்ளார். தடுக்கி விழுந்ததும் அவர் உடனடியாக கைகளை தரையில் ஊன்றி மேலே எழ, உடனிருந்த பாதுகாப்பு வீரர்களும் அவருக்கு உதவியுள்ளனர். இதில் பிரதமர் மோடிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : #NARENDRAMODI #UTTARPRADESH #PMMODI #GANGA #VIDEO #STEPS