'கோர்ட் ரூமுக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட.. கொலைக் குற்றவாளி'.. மாஜிஸ்திரேட் கண்முன்னே நடந்த பயங்கரம்! 18 போலீஸார் சஸ்பெண்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 18, 2019 01:31 PM

உத்தரப் பிரதேத்தில், மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளேயே இரட்டைக் கொலைக் குற்றம் செய்த கைதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கோர்ட்டையே நடுங்கவைத்தது.

18 police suspended after murder criminal shot dead in court room

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளான ஹாஜி இசான் மற்றும் அவரது உறவினர் இருவரும் முன்பகை காரணமாக 6 மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த இரட்டைப் படுகொலை வழக்கில், ஷாநவாஸ் மற்றும் ஜபார் ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸார் டெல்லி திகார் சிறையில் அடைத்திருந்தனர். 

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம்  ஆஜராகிய குற்றவாளிகளை நீதிமன்ற அறைக்குள் புகுந்த 3 பேர் சரமாரியாக துப்பாக்கியல் சுட்டனர்.  துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஷாநவாஸ் அதே இடத்தில் பலியானார்.

மற்றொரு குற்றவாளியும், குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற இரு போலீஸார் உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். எனினும் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மாஜிஸ்திரேட் யோகேஷ் குமார் காயமின்றி தப்பித்தார். துப்பாக்கியால் சுட்டவரை போலீஸார் விரட்டிப் பிடித்து விசாரணைய செய்ததில், கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டின் மகன் பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்தது தெரியவந்தது.

மேலும், கோர்ட்டுக்குள் புகுந்து நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளியை ஒருவர் சுட்டுக்கொல்லும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்ததால், 18 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #UTTARPRADESH