'தொட்டா சுட்டுடும்!'.. வன்கொடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ள, பெண்களுக்காக.. அறிமுகமான 'ஆண்டி ரேப் கன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 16, 2019 02:45 PM

பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நாட்டில் நடப்பதால், பல வகையில் சிரமப்படும் பெண்களுக்கென்றே பிரத்யேகமான ஆண்டி-ரேப்-கன் (Anti Rape Gun) என்கிற புதிய பண பர்ஸை உத்தரப் பிரதேச இளைஞர் ஷியாம் சௌராஸ்யா (Shyam Chaurasiya)  தயாரித்துள்ளார்.

indian youth invented anti rape gun for women safety

இரவு நேரங்களிலோ, தனியாக இருக்கும்போது பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல், உள்ளிட்ட ஆபத்துக்கள் பெண்களுக்கு நேரிடும்போது பெண்கள் தங்கள் முழு பலத்தையும் உபயோகிக்க முடியாத அளவுக்கு உடல்திறனை இழந்துவிடவும் நேரிடுகிறது. எதிர்வரும் நபர்களைத் தாக்கியே பெண்கள் தப்பிக்க வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேசம் வாரணாசியைச் சேர்ந்த இளைஞர் ஷியாம் சௌராஸ்யா, ஆண்ட்டி-ரேப்-கன் அல்லது பலவந்தத்துக்கு எதிரான துப்பாக்கி என்று பெயரிடப்பட்ட பண பர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் இருக்கும் பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால், தானாகவே போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்களுக்கு தகவல் போய்விடும். அதை வைத்து ஆபத்தில் சிக்கியிருக்கும் பெண்களின் லொகேஷனுக்கு போலீஸார் விரைந்து வந்துவிடுவர்.

தொடர்ந்து இந்த பர்ஸில் இருக்கும் ட்ரிக்கரை அழுத்தினால், துப்பாக்கியை இயக்கியது போன்றதொரு வெடிப்பு சத்தம் சுற்றியிருப்பவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப உதவும். ஆனால் இந்த ஆண்டி-ரேப்-கன் யாருக்கும் உயிர்ச்சேதத்தையோ உடல் சேதத்தையோ ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷியாம் சௌராஸ்யா, முன்னதாக ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கவசத்தை கண்டறிந்ததை அடுத்து அயர்ன் மேன் என்று அறியப்பட்டவர். இவர்தான் தற்போது பெண்களின் பாதுகாப்புக்காக இந்த பர்ஸையும் உருவாக்கியுள்ளார். 

Tags : #ANTIRAPEGUN #UTTARPRADESH #SHYAM CHAURASIYA