‘50 பயணிகளுடன்’ கிளம்பிய பேருந்து... லாரியுடன் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... ‘நொடிப்பொழுதில்’ பற்றிய ‘தீயால்’ நேர்ந்த பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 11, 2020 02:05 AM

உத்தரப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Bus Carrying 50 Catches Fire In UPs Kannauj After Accident

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் நகரில் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது அந்தப் பேருந்து எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நொடிப்பொழுதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் பேருந்திலிருந்த 21 பேர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விபத்தின்போது பேருந்துக்குள் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

Tags : #ACCIDENT #FIREACCIDENT #UTTARPRADESH #BUS #LORRY #COLLISION