10 நிமிஷத்துல 4 'குவார்ட்டர்' ... 'மது' குடிக்கும் போட்டியில்... வென்றவருக்கு 'நேர்ந்த' துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநண்பருடனான போட்டியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் ரத்தவாந்தி எடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் உகான்பூரை சேர்ந்தவர் சிங். இவர் தன்னுடைய உறவினரான பிரதீப் என்பவரின் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்கும் போட்டி நடந்துள்ளது.
இதில் 20 நிமிடங்களில் 4 குவார்ட்டர் குடிக்க வேண்டும் என்றும், தோற்றால் 8 குவார்ட்டருக்கு உள்ள பணத்தை வென்றவருக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டி கொண்டனர். போட்டி ஆரம்பித்த 10-வது நிமிடத்தில் ராஜேந்திர சிங் 4 குவார்ட்டரையும் தண்ணீர் கலக்காமல் குடித்து முடித்து பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி உற்சாகத்தில் வீட்டிற்கு வந்தவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்ய, ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே ராஜேந்திர சிங் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
