‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 13, 2020 01:49 PM
பனிமூட்டம் காரணமாக அரசுப் பேருந்து சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலிருந்து 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று லக்னோ நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளது. சிக்ராரா எனும் இடத்திலுள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது சாலைத் தடுப்பில் மோதிய பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டத்தால் சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிந்த லாரி தெளிவாகத் தெரியாத நிலையில், அதன் அருகில் சென்றதும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
Tags : #ACCIDENT #UTTARPRADESH #BUS #AGRA