கணவனின் 2-வது 'திருமணத்திற்கு' வந்த 'முதல்' மனைவி... மணமேடையிலே 'வைத்து' தர்ம அடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 16, 2019 02:27 PM

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவனை, மணமேடையிலேயே வைத்து மனைவி வெளுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

wife hit her husband, for try to marry another woman

உத்தர பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் ( 30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மஞ்சு என்ற மனைவி உள்ளார். ஆனால் 2-வது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட பங்கஜ் கடந்த 12-ம் தேதி திட்சாரி என்னும் கிராமத்தில் தன்னுடைய திருமண விழாவை நடத்த திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.

எப்படியோ இது மஞ்சுவுக்கு தெரிந்துவிட தன்னுடைய குடும்பத்தாருடன் அங்கு சென்ற மஞ்சு மணமேடையிலேயே வைத்து, பங்கஜ் குமாரை வெளுத்து எடுத்து விட்டார். தொடர்ந்து மஞ்சுவின் குடும்பத்தினர் பங்கஜ் குமாரை அருகில் இருந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில்  உள்ளது என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.