‘வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை’!.. ‘துடிதுடிக்க இளம்பெண்ணை தீ வைத்து எரித்த இளைஞர்’.. மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 15, 2019 11:08 AM

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP teenage girl was allegedly raped and set on fire

கடந்த மாதம் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் உன்னவ் பகுதியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், இந்த வழக்கில் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். இளம்பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கிராம பஞ்சாயத்து கூடியுள்ளது. அப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பஞ்சாயத்தில் முடிவாகியுள்ளது.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை அவரது உறவினர் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்துள்ளார். தற்போது 90 சதவீத தீக்காயத்துடன் அப்பெண் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்து செல்லப்பட்டபோது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இளம்பெண், ‘நான் வீட்டில் தனியாக இருந்தபோது என்னை பாலியல் வன்கொடுமை செய்து உறவினர் தீ வைத்தார்’ என கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #CRIME #SEXUALABUSE #UTTARPRADESH #GIRL #FIRE