“உன் பொண்ண கூட்டிட்டு வா!”.. “60 நாள் கூட்டு பலாத்காரம், வீடியோ மிரட்டல்”.. கடைசியில் பெண் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் பணியிடத்தில் பெண்மணி ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

2 மாதமாக பணியிடத்தில் நபர் ஒருவரால் தொடர் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்மணி ஒருவர், அதனை தன் தோழி ஒருவரிடம் நம்பி கூறியுள்ளார். ஆனால் அந்த தோழி, பலாத்காரம் செய்த ஆண்களின் தோழி என்பதால், தனது இன்னொரு நண்பரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அந்த ஆணும் ஏற்கனவே பலாத்காரம் செய்த ஆணும் நண்பர்கள்.
இதனையடுத்து இந்த 2 ஆண்களும் சேர்ந்து, முன்னதாக பலாத்காரம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் மீண்டும் 60 நாட்கள் தொடர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதோடு, அந்த பெண்மணியின் பருவ வயது மகளையும் அழைத்து வரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதன் பிறகே, துணிச்சல் வந்த அந்த பெண்மணி, போலீஸாரிடத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
