‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீப் (40) என்பவர் முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு சுவாதி (35) என்ற மனைவியும், கல்யாண் கிருஷ்ணா (6), ஜெய கிருஷ்ணா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சனிக்கிழமை முதல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பிரதீபின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது, வீட்டின் படுக்கையறையில் பிரதீப், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் பிரதீப் பொருளாதார பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களுடைய உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அவற்றை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இறப்பதற்கு முன் பிரதீப் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், தான் அவருக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரப் பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.