நிச்சயதார்த்தத்தின் போது.. ஓட்டம் பிடித்து, வீடு திரும்பிய ‘மாப்பிள்ளையின் அப்பா, மணமகளின் அம்மா’... மீண்டும் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 02, 2020 06:58 PM

குஜராத்தில் மகனுக்கும் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்த நிலையில், வருங்கால மருமகளின் தாயும், வருங்கால மருமகனின் தந்தையும் காதல் கொண்டு வீட்டை ஓடிப்போன சம்பவத்தில் மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்ந்துள்ளது.

couple elope again who ran on their kids wedding already

குஜராத்தின் சூரத்தில் உள்ள கடாகரம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஹிம்மத் பண்டவ் என்பவரது மகனுக்கும் மற்றும் நவஸ்ரி பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஷோபனா ரவல் என்பவரது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் ஹிம்மத்தும் ஷோபனா ரவலும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் வீட்டை ஓடிப்போன முன்னதாக பரபரப்பை கிளப்பிய செய்தியாக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், நட்பாக பழகி வந்தவர்கள் என்பதும் பின்னர் ஷோபனாவுக்கு திருமணம் ஆனதால் அவர் வேறு ஒரு ஏரியாவுக்கு வந்துவிட்டார் என்பதும் தெரியவந்தது.

எனினும் ஒருவழியாக கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு தத்தம் வீடுகளில் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் ஷோபனாவின் கணவர் அவரை ஏற்காததால் மீண்டும் ஷோபனாவும் ஹிம்மத்தும் காணாமல் போயுள்ளனர். இம்முறை விசாரித்ததில் இருவரும் சூரத் நகரிலேயே வீடு எடுத்து ஒன்றாக தங்கி வாழ்ந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags : #WEDDING #GUJARAT #MOTHER #FATHER #GROOM #BRIDE #ELOPE