‘தூக்க’ கலக்கத்தில்... ‘குழந்தைகளை’ பள்ளிக்கு அழைத்துச் சென்ற ‘தாய்க்கு’... பாதி வழியில் காத்திருந்த ‘அதிர்ச்சி!’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 27, 2020 04:04 PM

தாய் ஒருவர் தன் குழந்தைகளை மறந்து விட்டு வெறும் காரில் பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mom Drives To School To Drop Children But Forgets Them At Home

தன் குழந்தைகளை தினமும் காரில் பள்ளிக்கு அழைத்து செல்லும் தாய் ஒருவர், வழக்கம் போல காலை பள்ளிக்கு புறப்பட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார். வெகு தூரம் சென்ற பின்னரே அவர் காரில் தன் குழந்தைகள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகே தூக்க கலக்கத்தில் தான் குழந்தைகளை மறந்து வீட்டிலேயே விட்டு பள்ளிக்குக் கிளம்பியது அவருக்கு தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், தான் செய்ததை நினைத்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், மறந்து வீட்டிலேயே விட்டு வந்த குழந்தைகளை திரும்பிச் சென்று அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்தவர்களில் ஒருவர், அந்தப் பெண் வீடு திரும்பியவுடன் அவருடைய குழந்தைகள் அதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்தார்கள் எனக் கேட்க,  அதையும் அந்தப் பெண் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

 

 

Tags : #MOTHER #CHILDREN #SCHOO #CAR #VIRAL #VIDEO