‘தந்தையின்’ கஷ்டங்களை ‘கவிதையாக’ சொன்ன சிறுவன்... ‘பாராட்டுகளோடு’ திரும்பியபோது காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 01, 2020 06:10 PM

மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை குறித்து பள்ளியில் கவிதை சொன்ன சிறுவனின் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pune Farmer Ends Life On Day Son Recited Poem Against Suicide

மராத்தி மொழி தினமான பிப்ரவரி 27 அன்று மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 3வது படிக்கும் 8 வயதான பிரசாந்த் எனும் சிறுவன் கவிதைப் போட்டியில் பங்கேற்றுள்ளார். போட்டிக்காக  மகாராஷ்டிர விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து சிறுவன் எழுதிய கவிதை பள்ளியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘மலையளவு பிரச்னைகள் உனக்கு இருந்தாலும் நீ கடினமாக உழைக்கிறாய்; தற்கொலை செய்துகொள்ளாதே விவசாயி...’ எனத் தொடங்கும் அந்தக் கவிதை விவசாயிகளின் தியாகத்தைப் பற்றிக் கூறுவதாய் இருந்துள்ளது.

மேலும் அந்தக் கவிதையை விவசாயியான தன் தந்தை படும் கஷ்டங்களை நேரில் பார்த்தே பிரசாந்த் எழுதியுள்ளார். இதையடுத்து மாலை பள்ளி முடிந்ததும் சிறுவன்  தனது கவிதை குறித்து தந்தையிடம் கூற ஆவலாக வீடு திரும்பியுள்ளார். ஆனால் அப்போது தந்தை வீட்டில் இல்லாததால் சிறுவன் நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோதே, கடன் பிரச்னை காரணமாக தந்தை மல்ஹாரி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சிறுவனுக்கு தெரியவந்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #MAHARASHTRA #PUNE #FATHER #SON #SUICIDE #POEM #FARMERS