வங்கி பணியில் இருந்த 'காவலர்' ... இறுதியில் எடுத்த 'விபரீத' முடிவு .. 'சிவகங்கை' அருகே சோகம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 02, 2020 04:28 PM

சிவகங்கை அருகே வங்கி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bank Security in Sivagangai ends with committing suicide

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் யோகேஸ்வரன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் அங்குள்ள காவலர்களுக்கான அறையில் தங்கியிருந்தார்.

தனது அறையை ஒட்டியுள்ள கழிவறைக்குள் சென்ற யோகேஸ்வரன், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. யோகேஸ்வரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவரின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #SIVAGANGAI #SUICIDE