பெண் மருத்துவர் தற்கொலை: 'நீங்க' 3 பேரும்... அந்த 'ஹாஸ்பிடலுக்கு' உள்ள காலடி எடுத்து வைக்கக்கூடாது... நீதிமன்றம் கடும் காட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 24, 2020 08:35 PM

பெண் மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கில் கைதான 3 பெண் மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

Dr. Payal Suicide Case: Mumbai High Court Dismissed Petition

மும்பை நாயர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தவர் பெண் டாக்டர் பயல். இவர் கடந்த வருடம் மே மாதம் சாதிரீதியான தூண்டுதல் காரணமாக கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மேற்படிப்பு சீனியர் மாணவிகள் ஹேமா அகுஜா, பக்தி, அங்கிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது 3 பேரும் கோர்ட்டு அனுமதியின்றி மும்பையைவிட்டு வெளியேற கூடாது, நாயர் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நுழைய கூடாது போன்ற கடும் நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் தாங்கள் மீண்டும் மருத்துவ மேற்படிப்பை தொடரவும், நாயர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையவும் அனுமதி வழங்குமாறு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாணவிகளுக்கு நாயர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கக்கூடாது என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் நாயர் மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவிகள் மூவருக்கும் மேற்படிப்பு தொடர அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.