9 ஆண்டுகளுக்குப்பின் நடந்த 'ரீயூனியன்' மீட்டிங்... 'கிளாஸ்மேட்டால்' இளம்பெண்ணுக்கு 'நேர்ந்த' கொடுமை!
முகப்பு > செய்திகள் > இந்தியா9 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த கல்லூரி நண்பரால், இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெங்களூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு மொபைல் நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்களுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 3 லட்சம் பணம் வேண்டும். அத்துடன் தான் சொல்வது அனைத்தையும் கேட்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து அந்த பெண்ணின் ஈமெயில் முகவரிக்கு ஆபாச வீடியோ ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழைப்பு வந்த நம்பர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த எண்ணுக்கு சொந்தக்காரர் மத்திய பிரதேசத்தில் இருப்பது தெரிய வந்தது.
மத்திய பிரதேசத்தில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? என்று போலீசார் அந்த பெண்ணிடம் கேட்டனர். பதிலுக்கு அவர் ஆமாம் என்னுடைய கல்லூரி நண்பர் ஒருவர் இருக்கிறார் என தெரிவித்தார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் தீபக்(28) என்பதும், இருவரும் 2008-2011 வரை பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. கல்லூரி படிப்பு முடிந்து தீபக் மத்திய பிரதேசத்திற்கு சென்று விட்டார்.
மீண்டும் 2019-ம் ஆண்டு பெங்களூர் வந்து சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் கல்லூரி நண்பர்கள் அனைவரும் தீபக் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் அன்றிரவு தீபக் வீட்டிலேயே தங்கியிருந்து இருக்கிறார். அப்போது அவர் குளிப்பதை தீபக் தன்னுடைய மொபைலில் படம்பிடித்து வைத்துக்கொண்டு இந்த மிரட்டல் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது போலீசார் தீபக்கை கைது செய்து அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
