‘மரத்தில் தொட்டில் கட்டி’.. கைக்குழந்தையுடன் வேலை பார்த்த ‘பெண் காவலர்’.. ட்ரம்ப் வருகை பாதுகாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 24, 2020 11:50 AM

இந்தியா வரவுள்ள ட்ரம்ப்பிற்க்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வேலை பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Constable Sangita Parmar carries son on her duty in Ahmedabad

இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அகமதாபாத் நகர் முழுவதும் மாநில போலீசார் பாதுக்காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் காவலர் சங்கீதா பர்மார் என்பவர் தன் கைக்குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டே வேலை பார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ‘என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அவனுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும். அதனால்தான் உடன் அழைத்து வந்தேன். இது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஒரு தாயாகவும், பொறுப்புள்ள காவலராகவும் எனது கடமையை நிறைவேற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். சாலைக்கு அருகில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி குழந்தையை படுக்கவைத்து, அதே நேரத்தில் தனது கடமையையும் செய்த பெண் காவலருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #NARENDRAMODI #TRUMPINDIAVISIT #TRUMPININDIA #AHMEDABAD