'மருமகளின்' கள்ளக்காதலால்... மகன் தூக்குப்போட்டு 'தற்கொலை'... ஆத்திரத்தில் 'தந்தை' செய்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 23, 2020 12:49 AM

மருமகளின் கள்ளக்காதலால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில், தந்தை கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Worker Murdered near Krishnagiri, Police Investigate

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த இவருக்கும், கொத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமி(27) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதற்கிடையில் லட்சுமிக்கும், கட்டிட தொழிலாளி முரளி (35) என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது முரளியும், லட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நேரில் பார்த்த சீனிவாசன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சீனிவாசனின் தற்கொலை குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

திடீர் திருப்பமாக நேற்று மாலை முரளி தொட்டேஹள்ளி பகுதியில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சீனிவாசனின் தந்தை பர்சப்பா, முரளியைக் கொன்றதாக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தன்னுடைய மருமகள் லட்சுமி, முரளி இடையே இருந்த கள்ளத்தொடர்பை தாங்க முடியாமல் மகன் சீனிவாசன் தூக்குப்போட்டு இறந்து கொண்டான். தொடர்ந்து மருமகள் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.  ஆனால் முரளி அங்கும் சென்று லட்சுமியை தொந்தரவு செய்தான். இரண்டு நாட்களுக்கு முன் லட்சுமியை பார்ப்பதற்காக அவன் கொத்தூர் பகுதிக்கு சென்றான்.

நான் அவனை கண்டித்தேன். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மாலையும் லட்சுமியை பார்க்க வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கட்டையால் அடித்து அவனைக்கொன்று விட்டேன். என தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பர்சப்பா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.