'கூல்டிரிங்ஸ் தான் சும்மா குடி'... பள்ளி மாணவிக்கு... 'மாணவனால்' நடந்த கொடூரம்... போக்சோவில் 'அள்ளிச்சென்ற' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 24, 2020 01:18 PM

கூல்ட்ரிங்க்சில் மது கலந்து கொடுத்து பிளஸ் 1மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Plus 1 Student Arrested by Pocso Act, Near Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 1 வருடமாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 22-ம் தேதி காலை பேருந்து நிலையத்தில் அந்த மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மாணவரின் நண்பர்களான ராஜா(26), மஞ்சுநாத்(22) ஆகிய 2 வாலிபர்கள் அங்கே வந்துள்ளனர். இதையடுத்து மாணவிக்கு, மாணவர் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதற்குப்பின் மாணவிக்கு குளிர்பான பாட்டிலை கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.

அதில் மது கலந்திருந்த விவரம் தெரியாமல் அந்த மாணவி குடித்து மயங்கி விட்டார். தொடர்ந்து அந்த மாணவியை பேருந்து நிலையத்தின் பின்புறம் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தன்னுடைய ஊருக்கு சென்று நடந்ததை தன்னுடைய தாயாரிடம் கூற, அவர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மஞ்சுநாத், ராஜா இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.