'சிலிண்டர்' போட போன எடத்துல செம 'லவ்வு' ... இளம்பெண்ணை 'திருமணம்' செய்த 16 வயது சிறுவன்... 'போலீசில்' போட்டுக்கொடுத்த அக்கம் பக்கத்தினர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 24, 2020 01:59 PM

இளம்பெண்ணை திருமணம் முடித்த 16 வயது சிறுவனை போலீசில் அக்கம் பக்கத்தினர் போட்டுக்கொடுத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

16 year old boy married 19 year old girl in Bangalore

பெங்களூர் எல்&டி சவுத் சிட்டி அபார்ட்மெண்ட் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அமீர் என்னும் 16 வயது சிறுவன் சிலிண்டர் போட சென்றுள்ளான். அப்போது அங்கு ஒரு வீட்டில் ஆகிருதி என்னும் 19 வயது பெண் வீட்டுவேலை செய்து வந்துள்ளார். சிலிண்டர் போன இடத்தில் ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் காதலில் சென்று முடிந்துள்ளது. இருவரும் நேபாளி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக இவர்கள் காதல் வளர்ந்தது.

இதற்கிடையில் ஆகிருதி தன்னுடைய பெற்றோர் வீட்டைவிட்டு அந்த சிறுவன் வீட்டுக்கு ஓடிவந்து விட்டார். இதையடுத்து அமீரின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனுக்கு திருமணம் நடந்ததை என்ஜிஓ அமைப்பில் போட்டுக்கொடுத்து விட்டனர். அவர்கள் வந்து இருவரின் வயதை சரிபார்த்த போது அந்த சிறுவனின் வயது 16 என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் போலீசில் இதுபற்றி புகாரளிக்க அந்த சிறுவனுக்கு தற்போது சிறுவர்கள் காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறதாம். இளம்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.