“அவங்க நிலாவ காட்டி சோறு ஊட்டதான் முடியும்; ஆனால் எடப்பாடி ஆம்ஸ்ட்ராங்க் மாதிரி நிலாவுலயே இறங்குவார்!”.. அமைச்சர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 29, 2020 09:36 AM

திமுகவினர் நிலவை காட்டி சோறு மட்டுமே ஊட்ட முடியும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

TN Minister RP Udhayakumar differentiates DMK and ADMK

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டெண்டர் விடவே இல்லை என்றும் அதற்குள் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காமல் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசியவர், ‘திமுகவினர் நிலவை காட்டி சோறு ஊட்ட மட்டுமே முடியும்’ என்றும் ‘ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் ராக்கெட் எடுத்து நிலவில் ஆம்ஸ்ட்ராங்கைப் போல் இறங்குவார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #UDHAYAKUMAR