‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 12, 2019 06:49 PM

உன்னாவ் பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றி அவருடைய சகோதரி ஊடகத்திடம் பேசியுள்ளார்.

She Used To Be Scared Of Fire Says Unnao Rape Victims Sister

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கடந்த 5ஆம் தேதி இளம்பெண் ஒருவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதையும் உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத் சம்பவம் போலவே இவர்களுக்கும் உடனடியாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணைப் பற்றி ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள அவருடைய சகோதரி, “என் தங்கை மிகவும் தைரியமானவள். அவள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திறமை கொண்டவள். அதனால் நாங்கள் அவளை குஷி  (குஷி என்றால் மகிழ்ச்சி என்று பொருள்) என்று தான் அழைப்போம். அன்று அதிகாலை குஷி 3.30 மணிக்கு எழுந்து வீட்டை விட்டு கிளம்பினாள். பிறகு 7 மணிக்குத்தான் அவள் எரிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எங்களுக்கு தெரியவந்தது.

தீப்பற்றியதும் வலி தாங்கமுடியாமல் உதவி கேட்டு ஊர் மக்களை நோக்கி ஓடிச் சென்ற அவளை பார்த்து பயந்து யாரும் உதவ முன் வராமல் இருந்துள்ளனர். தன்னை யாரெனக் கூறி உதவி கேட்க முயன்றும் எரிந்த உடலால் யாராலும் குஷியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பின் அவளே அங்கிருந்த ஒருவரின் போனை வாங்கி ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறாள்.

நான் மருத்துவமனையில் குஷியைப் பார்த்தபோது உடைந்து அழுத அவள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்பதுதான். பின் அவள், “ஒருவேளை நான் இறந்தால் அதற்கு காரணமானவர்களைத் தூக்கிலிடுங்கள்” எனக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள். ஹைதராத் சம்பவம் போலவே என் சகோதரியைக் கொன்றவர்களுக்கும் உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும். 

குஷிக்கு நெருப்பு என்றால் மிகவும் பயம். சமைக்க வேண்டும் என்றால் கூட அவள் அடுப்பு பற்ற வைக்க மாட்டாள். வேறு யாராவது பற்ற வைத்துக் கொடுத்தால்தான் குஷி சமைப்பாள். அவள் பயந்த நெருப்பே அவளைக் கொன்றுவிட்டது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. குஷி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு நாங்கள் பல பிரச்சனைகளை சந்தித்தோம். இறுதியில் அவர்கள் அவளைக் கொலையே செய்துவிட்டனர். இதுவரை அவள் தனியாகப் போராடினாள் தற்போது நானும் இணைந்து போராடப் போகிறேன்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Tags : #CRIME #MURDER #UTTARPRADESH #RAPE #UNNAO #GIRL #SISTER #FIRE