'ஹெல்மெட் போடலையா?'... 'அப்போ இது உங்களுக்குத் தான்!'... 'காவல் துறை கொடுத்த ஷாக்!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ கொடுத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சந்திப்பு சாலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹெஸ்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு ரோஜா மலர் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டுமென, ரோஜா பூ கொடுத்து அறிவுறுத்தினார்.
இச்சம்பவம், வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.