மீனுக்கு சவப்பெட்டி ... 'அமெரிக்க' மாணவர்கள் 'இறுதி அஞ்சலி'... 'டின்னர்' என்னவோ 'ஃபிஷ் ஃபிரைதான்'... 'மசாலா' கொஞ்சம் தூக்கலா...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 06, 2020 09:15 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் லூம்பா என்ற வளர்ப்பு மீனுக்கு மனிதர்களுக்கு செய்வது போன்று இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

American students paying final tribute to the dead fish

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் லூம்பா என்ற பெயர் கொண்ட வளர்ப்பு மீன் உயிரிழந்தது. அதற்கு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்த மாணவர்கள் முடிவு செய்தனர். பிறகு இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக பேனா வைக்கும் பெட்டியை சவப்பெட்டி போன்று அலங்காரம் செய்து அதில் மீனை வைத்து எடுத்து வந்தனர். மாணவர்கள் பெரும்பாலும் வழக்கமாக மனிதர்களின் இறுதிச் சடங்குக்கு செல்வது போன்று கருப்பு உடை அணிந்திருந்தனர்.

பின்னர் மீன் வைக்கப்பட்ட சவப்பெட்டியை ஒரு மேடை மீது வைத்து அதன் மீது குச்சிகளை அடுக்குகின்றனர். தொடர்ந்து அதன் மீது எரிபொருள் ஒன்றை ஊற்றி ஒரு மாணவர் தீயை பற்ற வைக்கிறார்.

 

மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த மீனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த சில நெட்டிசன்கள் 'ரிப்' என பதிவிட்டு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மீனும் ஒரு உயிர்தான் என பதிவிட்டு தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #AMERICA #TEXAS UNIVERSITY #PAYING FINAL TRIBUTE #DIED FISH