கட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கொடைரோடு டோல்கேட்டில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால், கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்த கார் அவர் மீது மோதியது. பின்னர் நிலை தடுமாறிய அந்த கார், வலது பக்க சென்டர் மீடியன் தடுப்பை தாண்டி அடுத்த பக்க சாலையில் வேகமாக சென்றது. அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஒட்டன்சத்திரம் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், மைந்தன், ஜெயந்திலால்மணி, ஜெபக் கனி ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சைக்கிளில் சென்ற முதியவர் கிருஷ்ணன், திண்டுக்கல் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் மதுரையில் இருந்து சென்ற காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்ட போது, மீட்பு வாகனத்திலிருந்த இரும்பு சங்கிலி அறுந்து காவலர் பெருமாள் என்பவர் தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சாலை விதியை மதிக்காமல் சென்றதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாககி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
