"ஆன்லைன் கேம்க்கு அடிமையான வங்கியாளர்!".. அதுக்காக இப்படி ஒரு காரியத்தையா செய்றது? உறைந்துபோன கஸ்டமர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நுழிவீடு பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை முதன்மை கேஷியராக பணியாற்றி வருபவர் குந்த்ரா ரவி தேஜா.

இவர் தனது நண்பரின் உதவி மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். சில நாட்களில் இவர் வேலையை விட்டு ரம்மியில் மூழ்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது வங்கி கணக்கில் உள்ள தொகையைக் கொண்டு ரம்மி விளையாடி வந்த இவரது செயலைக் கண்டு அதிர்ந்த இவரது குடும்பத்தினர், கடும் எதிர்ப்பினை தெரிவித்ததோடு வங்கி பணியின்போது ரம்மி ஆட்டத்தை போட்டு அலுவலகத்திலேயே ரணகளத்தை ஏற்படுத்தி வந்த இவரை கண்டித்தனர்.
ஒருகட்டத்தில் தனது கையிருப்பு கரைந்து போனதால் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கை வைக்க தொடங்கியுள்ளார் ரவி தேஜா. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாடிக்கையாளர்களின் நிரந்தர சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து தனது கணக்கிற்கு பணத்தை மாற்றி ரம்மி விளையாடும் அளவுக்கு அடிமையாகினார்.
இதனை அடுத்து நிரந்தர சேமிப்புத் தொகையில் மாறுபாடு ஏற்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து எழுந்த புகாரை அடுத்து மேலதிகாரி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இவர் சிக்கிக்கொண்டார். விசாரணையில் இவரிடமிருந்து 1 கோடியே 56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ரவி தேஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்
