பேங்கில் ரூ.500 எடுக்க 30 கிமீ நடந்தே சென்ற பெண்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. வெறுங்கையுடன் வீடு திரும்பிய சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 05, 2020 05:10 PM

ஜன்தன் வங்கி கணக்கில் 500 ரூபாய் நிவாரண நிதியை பெறுவதற்காக 30 கிமீ நடந்தே சென்ற பெண் வெறுங்கையுடன் திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

50 year old woman walks 30km to withdraw Rs500 returns empty handed

ஊரடங்கு உத்தரவால் வாடும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் டெல்லி ஆக்ரா பகுதியில் வசிக்கும் ராதாதேவி (50) என்ற பெண், தனது வங்கி கணக்கு உள்ள பைரசோபாத் மாவட்டம் பச்சோகரா என்ற இடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன போக்குவரத்து வசதிகள் இல்லை.

இதனால் தனது 15 வயது மகனுடன் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பின்னர்தான் தனது வங்கி கணக்கு ஜன்தன் கணக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்ச பணம் கூட இல்லை. இதனால் இவ்வளவு தூரம் நடந்து வந்து பணம் கிடைக்காத சோகத்தில் மனமுடைந்து மீண்டும் நடந்தே ஊருக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த வங்கியின் வாடிக்கையாளர் மைய அலுவலர் ஷ்யாம் பதக், ‘ஜன்தன் வங்கி கணக்கு இல்லை என்ற தகவலை கேட்டதும் ராதாதேவி மிகவும் மனமுடைந்துவிட்டார். அதனால் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினோம்’ என தெரிவித்தார். கூலித் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த ராதாதேவி, ஜன்தன் வங்கி கணக்கு பற்றி தெரியாமல் நிவாரண நிதி பெறவேண்டும் என 30 கிலோமீட்டர் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.