1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கொரோனாவால் மரணம்! 2. தமிழ்நாட்டில் வங்கிகளின் நேரம் மீண்டும் மாற்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 17, 2020 11:25 AM

1. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1007 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Top 10 one line news more details to read here 17th Morning

2. அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

3. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் 3 கட்டங்களாக ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான பொறுப்பை அதிபர் டிரம்ப், மாநில ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

4. கொரோனா தொற்று குறித்து உடனடியாக அறிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்தன. 

5. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அவசர நிலையை விரிவுபடுத்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6. ஊரடங்கு நீட்டிப்பால் தமிழ்நாட்டில், வங்கிகள் அனைத்தும் மே 3-ந் தேதி வரை காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

7. சச்சின் டெண்டுல்கரைவிட வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா பந்துவீசுவதே கடினமாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.

8. கொரோனா வைரசின் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து, சந்தைக்கு முதலில் கொண்டு வந்து நிறுத்தப்போவது யார் என்ற போட்டி இந்தியா, சீனா, அமெரிக்கா இடையே தற்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

9. 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

10. கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

11. விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.