'அத அங்கேயே வைங்க' ... 'இப்போ எப்படி எடுக்குறேனு பாருங்க' ... அட அட இதுவல்லவோ SOCIAL DISTANCING ... வங்கி ஊழியரின் கொரோனா விழிப்புணர்வு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 05, 2020 08:48 PM

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வேண்டி, முன்னேற்பாடாக வங்கி ஊழியர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral video of Bank employee for Corona awareness

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல்  வெளியே வரவேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் சிலர் எந்தவித தேவையுமில்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிகின்றனர். சமூக விலகலை கூட ஓழுங்காக கடைபிடிக்காமல் எந்தவித விழிப்புணர்வும் இன்றி இருந்து வருகின்றனர்.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால் வங்கிகள் அனைத்தும் குறைவான ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் செல்லானை அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் அளிக்கும் செல்லானை தனது கை கொண்டு தொடாத அந்த ஊழியர் ஸ்கேல் ஒன்றை பயன்படுத்தி அதனை எடுத்து அயர்ன் பாக்ஸில் சுத்தம் செய்து பின் பயன்படுத்துவதாக உள்ளது.

வங்கி ஊழியரின் இந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.