‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Apr 01, 2020 09:31 PM

பொது மக்கள் வங்கிக்கு சென்று பணம் பெற வேண்டிய அவசியம் உள்ளதால் அனைத்து வங்கிகளும் நாளை முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

RBI announced Bank full timing working 10 to 4 from April 2nd

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால்,  அனைத்து வங்கிகளும் நாளையில் இருந்து (2-ந்தேதி), காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

‘கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வங்கி சேவை ஒருவாரம் குறைக்கப்பட்டு இருந்தது. நாளை முதல் மீண்டும் வழக்கமான சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகளை வங்கிகள் மூலமாக வழங்கி வருகிறார்.

அந்த நிதிகளை வழங்குவதற்கு வங்கிகள் முழுமையாக செயல்பட்டு ஆக வேண்டும். இன்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த போதிலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை கிடையாது. வங்கி கணக்குகள் இன்று முடிக்கப்படுகின்றன. நாளை முதல் முழுமையாக வங்கிகள் செயல்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.

Tags : #CORONAVIRUS #CORONA #RBI #BANK