'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்!'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்'! புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 14, 2020 11:19 PM

சென்னை வளசரவாக்கம், ஜெய் கார்டன், முதல் தெருவைச் சேர்ந்த 65 வயதான பிரபாகரன் என்பவர், ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்க்கு சென்று பணம் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் வயது மூப்பு காரணமாக, பிரபாகரன் தனது கண்பார்வை துல்லியமாக இல்லை என்று அருகில் இருந்த டிப்டாப் மனிதர் ஒருவரிடம்  "சர்... சரியா தெரியல.. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என கேட்டுள்ளார். .

ATM Fraudster cleverly cheats old man in Chennai

அவரோ, “அதனால் என்ன? உதவி செஞ்சுட்டா போச்சு!” என்பது போல் பிரபாகரனின் ஏடிஎம் கார்டினை வாங்கி ஸ்வைப் செய்துள்ளார். பின்னர், பிரபாகரனிடம் ஏடிஎம் பின் நம்பரை அவர் எதார்த்தமாக கேட்க, பிரபாகரன் பதார்த்தமாகச் சொல்ல, அவர் அந்த நம்பரை போட்டுள்ளார். ஆனால் “பணம் வரவில்லையே? அக்கவுண்ட்ல பேலன்ஸ் இருக்கானு மொதல்ல செக் பண்ணிட்டு வாங்க!” என்று அந்த டிப்டாப் மனிதர் பிரபாகரனிடம் கூறியதோடு, அவரிடமே ஏடிஎம் கார்டினை தந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். “சரி.. நமக்கு வொர்க்-அவுட் ஆகல போல” என்று சொல்லி,  பிரபாகரன் அங்கிருந்து செல்ல, அப்போதுதான் பிரபாகரனின் செல்போனுக்கு அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து 50 ஆயிரம் பணம் டெபிட் ஆனதாக அவருடைய செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ந்த பிரபாகரன், தனது வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். பிரபாகரனின் கையில் இருந்தது அவருடைய கார்டே இல்லை.

பிளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்த்தால், அந்த டிப்டாப் மனிதர் பிரபாகரனின் கையில் ஒரு போலி ஏடிஎம் கார்டினை கொடுத்துவிட்டும் பிரபாகரனின் உதவியோடு அவரது ஏடிநம் நம்பரையும், பிரபாகரனுக்கே தெரியாமல் அவருடைய ஏடிஎம் கார்டினையும் லாவகமாக லாவிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் மற்றும் வேறு ஏரியாக்களில் பிரபாகரனைப் போலவே ஏமாற்றப்பட்ட வயதானவர்களிடம் இருந்து பெற்ற போலி ஏடிஎம் கார்டுகளின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்த போலீஸார் வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரைச் சேர்ந்த 50 வயதான பார்த்தசாரதி என்பவர்தான் இந்த குற்றங்களைச் செய்ததாக கண்டுபிடித்ததோடு, அவரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 28 போலி ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மீதமிருந்த பணத்தை செலவு செய்துவிட்ட பார்த்தசாரதி, ஊரடங்கு காரணமாக கையில் பணமில்லாததால், கொரோனா கால சிறப்பு திருட்டாக, வயதானவர்களை குறிவைத்து தனது கைவரிசையைக் காட்டியுள்ளார் என்பதும், இவர் விருகம்பாக்கத்தில் டெக்ஸ்டைல் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.