'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 15, 2020 05:24 PM

தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

India Corona Lockdown TN Latest Bank Timing Changes Details

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு வங்கிக்கணக்கு வழியே செலுத்தியதால், அந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளின் வேலை நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கிகளின் வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என மாநில அளவிலான வங்கிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை பகல் 1 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.