‘ஏடிஎம் கார்டு மேலே பத்னாரு நம்பர் சொல்லுங்கேமா’.. தமிழ்நாட்டை டார்கெட் பண்ணி வேலைபார்த்த ஸ்பெஷல் டீம் இதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 25, 2020 05:11 PM

தமிழகத்தைச் சேர்ந்த முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் பேசுவதாக பொய் கூறி கடன் என்றோ, வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியோ ஏடிஎம் கார்டின் பின்னால் உள்ள 16 இலக்க எண்களை, மக்களின் வாயில் இருந்து வாங்கிவிடுவதே இலக்காக செயல்பட்டு வந்துள்ள வட மாநில கும்பலை சேர்ந்த 3 பேரை டெல்லியில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏடிஎம் நம்பர் திருடர்கள் கைது Bank Prank call fraudsters arrested

இதுவரை 3 கோடி ரூபாய் கொள்ளை அடித்த இந்த கும்பல், கார்டு விபரங்களை வைத்து கூகுள் பே, மோபிக் விக், பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை ஆப்களில் போலி கணக்குகளைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்ட தமிழக தனிப்படை போலீசார் தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாகியுள்ள சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தை டாரெக்ட் செய்து இயங்கியது இந்த கும்பல்தான் என்பது தெரியவந்தது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறூம், கார்டுகளின் ரகசிய விவரங்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : #CHEAT #FRAUDSTERS #BANK #ATM