'மே மாதத்துக்கான உதவித் தொகை’... ‘இவர்களின் வங்கிக் கணக்கில் மட்டும்’... ‘ மத்திய அரசு செலுத்திய பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் இரண்டாவது தவணையாக தலா 500 ரூபாய் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தலா 500 ரூபாய் உதவித் தொகை செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் மாதம் முதல் தவணையாக 20 கோடியே 5 லட்சம் பேரின் கணக்குகளில் மொத்தம் பத்தாயிரத்து 25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. மே மாதத்துக்கான 500 ரூபாய் செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
0, 1 என்ற எண்களை கடைசி எண்ணாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள், இன்று, தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். அதேபோல, 2, 3 என்ற கடைசி எண் உடைய வாடிக்கையாளர்கள், நாளையும், 4, 5-ஐ கடைசி எண்ணாக உடைய வாடிக்கையாளர்கள், வரும், 6-ம் தேதியும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
கடைசி எண், 6, 7-ல் முடியும், வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள், 8-ம் தேதியும், 8, 9-ம் எண் உடைய வாடிக்கையாளர்கள், வரும், 11-ம் தேதியும் பணம் பெறமுடியும். எனவே, ஜன்தன் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்கின் கடைசி எண்களை பார்த்து, அந்தத் தேதியில் பணம் எடுத்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் வங்கிக்கு வர வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கிகளில், ஒரேநாளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க இவ்வாறு 5 நாட்களாக பணம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.